எலுமிச்சை சூப் - lemon soup in tamil

லெமன் சூப் செய்முறை

தேவையானவை


எலுமிச்சம் பழம் – 3
காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.செய்முறை:


ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும்.

சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.

எலுமிச்சை சூப் மருத்துவ பயன்கள்


எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

சமமான பி.எச். அளவுகள்


நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

உடல் எடையைக் குறைக்க...


உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.
செரிமானம்

நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளில் கொண்டு போய் விட்டு விடும். எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.
keywords; lemon soup seimurai, elumitchai soop seyvathu eppadi, soup vakaikal, vegital lemon suop, lemon soup in tamil , how to make lemon soup at home in tamil, lemon soup paynakal, maruthuva payankal, gunangal, லெமன் சூப் செய்முறை விளக்கம், வீட்டில் சூப் செய்வது எப்படி? லெமன் சூப் மருத்துவ பயன்கள், மருத்துவ குணங்கள். lemon uses for weight loss in tamil lemon tamil maruthuvam how to use lemon on your face in tamil lemon beauty tips in tamil lemon benefits weight loss in tamil lemon juice recipe tamillemon disadvantages in tamil lemon in tamil meaning
Share on Google Plus

About ஔசதம் Owshadham

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
lt;!-- -->