ராகி சேமியா எப்படி செய்வது
- ராகி சேமியா - 200 கிராம்,
- மெல்லியதாக, நீளமாக நறுக்கிய கேரட்,
- தக்காளி, வெங்காயம்,
- முட்டைகோஸ்,
- குடமிளகாய் துண்டுகள் (சேர்த்து) - 2 கப்,
- இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
- கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு,
- முந்திரி,
- உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - தலா 10,
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
ராகி சேமியாவைச் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியே வைக்கவும். கடாயைச் சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும் காய்கறிகள், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கிளறி எடுத்து கிச்சடிக் கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்
ragi semivathu eppadi, raagi semiya seimurai vilakkam, vegitable semiya, semiya priyani, ragi semiya sweet ragi semiya puttu how to make ragi semiya at home how to make ragi noodles at home ragi semiya payasam ragi semiya padhuskitchen manna ragi vermicelli recipe ragi vermicelli online vigitable ragi semiya seimurai ராகி சேமியா வெஜ் பிரியாணி செய்முறை விளக்கம்.