தேவையானப் பொருள்கள் :
- நீள புடலங்காய் - 1
- வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
- பொட்டுக்கடலை பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
- சீரகத்தூள் - தேவையான அளவு
- மிளகுத்தூள் - தேவையான அளவு
- இந்துப்பு - தேவையான அளவு
- தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி
- பீட்ரூட் துருவல் - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு
முதலில் நீளமானப் புடலங்காயை குறுக்குவாக்கில் ஒரு இஞ்ச் அளவுக்கு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கிய புடலங்காயின் வளையத்தில் இருக்கும் விதையை நீக்கி, அதை இந்துப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு கைப்பிடி அளவுக்கு தேங்காய் மற்றும் பீட்ரூட்டை தனித்தனியாகத் துருவி தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துப் பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடி, பொட்டுக்கடலைப் பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பீட்ரூட் துருவல், கொத்தமல்லித் தழை, இந்துப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பூரணம்போலத் தயார் செய்து கொள்ளவேண்டும். இப்போது வளையமாக உள்ள புடலங்காயின் மத்தியில் இந்தப் பூரணத்தை வைத்து நிரப்ப வேண்டும். ஆற்றல்மிகுந்த, வண்ணமயமான, பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் சுவைமிகு 'இயற்கை புடலங்காய் கட்லெட்' தயார்.
புடலங்காய் மருத்துவ பயன்கள்.
இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும். குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். ஆண்மை கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும். கண் பார்வையை தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்udalangai kootu in tamil language pudalangai poriyal recipe in tamil pudalangai fry in tamil pudalangai kulambu in tamil pudalangai gravy pudalangai kootu recipe video pudalangai in tamil pudalangai varuval recipe, snake gourd recipes in tamil, snake gourd recipes in tamil. snake gourd medicinal uses in tamil snake gourd 65 snake gourd deep fry snake gourd crispy fry pudalangai chili pudalangai deep fry in tamil pudalangai fry padhuskitchen pudalangai chilli in tamil pudalangai chips புடலங்காய் கட்லெட் செய்முறை விளக்கம், புடலெங்காய் மருத்துவ பயன்கள் புடலங்காய் எப்படி செய்வது, புடல்ங்காய் மருத்துவ குணங்கள். cutlet recipes in tamil, cutlet in tamil
good
ReplyDeletethank u
ReplyDelete