மூலிகை சூப்
மூலிகை சூப் |
- வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
- கற்பூரவள்ளி - 5 இலைகள்
- துளசி - 10 இலைகள்
- பசும் பால் - 1/2 கப்
- கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் கலவை - 1 கப்
- சோளமாவு (Corn flour) - 2 மேஜை கரண்டி
- நாட்டு சக்கரை - 1.25 மேஜை கரண்டி
- மிளகு தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு ஏற்ப்ப
- வெண்ணை - 1 தேக்கரண்டி
மூலிகை சூப் மருத்து பயன்கள்
சளி, இருமல், தும்மல், கோழைக்கட்டு, காய்ச்சல் ஆகியற்றவை குணப்படுத்தும். நரம்புகளுக்குச் சத்தினை கொடுக்கிறது, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
மூலிகை சூப் செய்முறை
வெங்காயத்தாள், கற்பூரவள்ளி, துளசி, கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடைமிளகாய் முதலானவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கிகொள்ளவும். இதில் சிறிது எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
முதலில் வானலியில் ஒரு தேக்கரண்டி வெண்ணையுடன் நறுக்கிய வெங்காயத்தாலை சிறு பொன்னிறமாகும் வரை வதக்கவும் இதனுடன் நறுக்கிய கற்பூரவள்ளி, துளசி மேலும் 1/2 கப் காய்கறிகளை சேர்த்து சிறு தீயில் நன்றாக வேகவைக்கவும்.
வேகவைத்த பின் இந்த கலவையை நன்கு ஆறியதும் மை பதத்திர்க்கு அரைக்கவும் இதனுடன் மீத்முள்ள காய்கறிகளுடன் உப்பு நாட்டு சக்கரை சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது 1/2 கப் பாலுடன் சோளமாவினை கட்டியாகமல் கரைத்து கொதிக்கும் கலவையுடன் சேர்க்கவும்.
மேலும் கொத்தித்து சூப் பதம் வந்ததும் மிளகு தூளை சேர்த்து இறக்கி விட்டு சூபின் மீது மிதமுள்ள காய்கறிகளை போட்டு அழகு படுத்தவும்.