முடக்கற்றான் கீரை சூப் - mutakattran keerai soup

Owshadham - ஒளசதம்
0

முடக்கற்றான் கீரை சூப்

முடக்கற்றான்  கீரையை ஆய்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும்.
முடக்கற்றான் கீரை சூப்
 
தேவையானவைகள்
  1. முடக்கத்தான் கீரை - 1 கப் 
  2. துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் 
  3. மிளகு - 1 டீஸ்பூன் 
  4. சீரகம் - 2 டீஸ்பூன்
  5. எண்ணெய் - 1 டீஸ்பூன் 
  6. கடுகு - 1 டீஸ்பூன் 
  7. மிளகாய் வற்றல் - 3 
  8. புளி - எலுமிச்சை அளவு 
  9. பெருங்காயம் - சிறிதளவு 
  10. பூண்டு - 1 
  11. உப்பு - தேவையான அளவு 
 

சூப் செய்முறை

முடக்கற்றான்  கீரையை ஆய்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும். 

முடக்கற்றான் கீரை மருத்துவ பயன்

முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். 

mudakatraan keerai soup, mutakatran kirai soup, mutakatran keerai soop seivathu eppadi, mud katran soap seimurai. mooligai soupkal, soop eppadi seivathu, soup seimurai, soup maruthuva payankal. mudakatran mooligai maruthuva kunam. mudakatraan keerai soup in tamil,  mudakatraan keerai soup maruthuva payan in tamil

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !