தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு ஒரு ஆழாக்கு அல்லது பயத்தம் பருப்பு ஒரு ஆழாக்கு மஞ்சள் பொடி நெய் மிளகாய் வற்றல் 8 மிளகு பத்து தனியா ஒரு தேக்கரண்டி சீரகம் அரைத்தேக்கரண்டி லவங்கப் பட்டை சிறு துண்டு கொப்பரை துருவல் 80 கிராம் புளி சிறிதளவு உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை 2 ஆர்க்கு பெருங்காயம் சிறிதளவு.செய்முறை
4 ஆழாக்கு சுத்த நீர் அடுப்பில் வைத்து கொதித்ததும் துவரம் பருப்பு அல்லது பயத்தம் பருப்பு மஞ்சள் பொடி நெய் ஒரு தேக்கரண்டி போட்டு மூடி வைக்கவும் மிளகாய் தனியா சீரகம் இலவங்கப்பட்டை கொப்பரை துருவல் இவற்றையெல்லாம் நெய்யில் வறுத்து வெண்ணெய் போல் அரைத்து அரை ஆழாக்கு தண்ணீரில் கரைத்து பருப்பு வெந்ததும் அதில் கொட்டி நெய் அரை தேக்கரண்டி விட்டு மூடி வைக்கவும்.பிறகு அரை ஆழாக்கு தண்ணீரில் 40 கிராம் புலியும் ஒரு தேக்கரண்டி உப்பும் போட்டு கரைத்து பருப்பில் கொட்டி நன்றாக மசித்துவிட்டு பருப்பு மெத்தையாக வந்ததும் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் 4 கிள்ளிப்போட்டு கடுகு அரை தேக்கரண்டி கறிவேப்பிலை ஆர்க்கு சேர்த்து தாளித்து கொட்டி மீண்டும் ஒருமுறை மசித்து பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து பருப்பில் கொட்டி கிளறி இறக்கவும்.