‍‍‌ பருப்பு குழம்பு சாதம் - how to make dhal rice in tamil

Owshadham - ஒளசதம்
0

பருப்பு குழம்பு சாதம் செய்வது எப்படி

பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு சாதம் மருத்துவ பயன்கள். நாம் உண்ணும் உணவின் மருத்துவ பயன்கள். parupu kulampu sadam seivathu eppadu, seimurai, paruppu kzhampu sadam seimurai, maruthuva payankal.maruthuva nanmaigal, dall benifits in tamil, dhuvaram parupu in english

பருப்பு சாதம் வகைகள்,பருப்பு சாதம் செய்வது எப்படி, பருப்பு சாதம் செய்முறை, 30வகை சாதம், பருப்பு சாதம் மருத்துவ பயன்கள். நாம் உண்ணும் உணவின் மருத்துவ பயன்கள். parupu kulampu sadam seivathu eppadu, seimurai, paruppu kzhampu sadam seimurai, maruthuva payankal.maruthuva nanmaigal, dall benifits in tamil, dhuvaram parupu in english

தேவையானவைகள்

  1. பச்சரிசி - 4 ஆழாக்கு 
  2. துவரம் பருப்பு - 2 ஆழாக்கு 
  3. தனியா - 30 கிராம் 
  4. உளுத்தம்பருப்பு - 40 கிராம் 
  5. கடலைப்பருப்பு - 40 கிராம் 
  6. மிளகு - 20 கிராம் 
  7. மிளகாய் வற்றல் - 2 
  8. வெந்தயம் - 10 கிராம் 
  9. பெருங்காயம் பட்டாணி அளவு 
  10. கொப்பரைத் துருவல் 8 தேக்கரண்டி 
  11. புளி இரண்டு எலுமிச்சை அளவு 
  12. மஞ்சள் பொடி கடலை அளவு 
  13. உப்பு 50 கிராம் 
  14. நெய் 100 கிராம் 
  15. ஜாதிக்காய் - 2 பட்டணி அளவு 
  16. சாதிபத்திரி சிறிதளவு 
  17. கிராம்பு 6 
  18. சீரகம் 10 கிராம் 
  19. முந்திரிப் பருப்பு 10 கிராம் 

செய்முறை

தனியா கடலைப் பருப்பு உளுந்தம் பருப்பு மிளகு மிளகாய் வற்றல் வெந்தயம் பெருங்காயம் சாதிக்காய் சாதிப்பத்திரி கிராம்பு சீரகம் இந்தப் பதினாறு பொருட்களையும் நெய்யில் வறுத்து பொடி செய்துகொண்டு பிறகு கொப்பரைத் துருவல் முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு படி தண்ணீர் வைத்து துவரம் பருப்பை மஞ்சள் பொடியையும் போட்டு வேகவிடவும். அரிசியை நன்றாகக் களைந்து ஊறவைக்கவும் துவரம் பருப்பு வெந்ததும் அரிசியை போட்டு வேகவிடவும் அரிசி முக்கால் பதம் வெந்ததும் புளி உப்பு இரண்டையும் ஒரு ஆழாக்கு தண்ணீரில் கரைத்து சாதத்தில் கொட்டவும் புளி தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை போட்டு கிளறி மூடி வைக்கவும்.
சாதமும் பருப்பு பொடியும் சேர்த்து பக்குவமாக கொப்பரை துருவலையும் முந்திரிப்பருப்பையும் போட்டு கிளறவும் பிறகு இரண்டு மிளகாய் வற்றல் கடுகு கறிவேப்பிலை சிறிது நல்லெண்ணெயில் தாளித்து சாதத்தில் சேர்த்து கிளறவும்.

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்

பருப்பு குழம்பு சாதம் மருத்துவ பயன்

துவரம் பருப்பு நல்ல உடல் வலிமையை கொடுக்கும், ஆண்களுக்கு விந்தனு பெருக்குவதில் முக்கி பங்கு வகிக்கின்றது மேலும் பருப்பு குழம்பு சாதத்தில் ஜாதிகாய், ஜாதிபத்திரி கொப்பரை தேங்காய், முந்திரி பருப்பு, நெய், கிராம்பு, உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் நல்ல ஆண்மை எலுச்சி ஏற்ப்படும் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக சேர்க்க கூடாது

வெந்தயம், தனியா உடல் குளிர்ச்சியை உண்டாக்கும். கணையத்திற்க்கு இது ஓர் ஊக்க மருந்தாகும். சக்கரை நோயை கண்டிக்கும்.

சீரகம் நெஞ்சு எரிச்சலை கட்டுபடுத்தும், ஜீரண்சக்தியை தூண்டும்.

புளி இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு நல்ல ஜீரண சக்தி கொடுக்கக் கூடியது. அதே சமயம் விந்து அணுக்களை கரைக்ககூடியது ஆகையால் அளவாக பயன்படுத்துவது நல்லது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !