பரங்கிகாய் அல்லது பூசணிக்காய் கார தோசை
Add caption |
பூசனிக்காய் கார தோசை செய்முறை அல்லது பரங்கிகாய் தோசை இங்கு பூசணிகாய் பரங்கிகாய் இரண்டுமே ஒன்றுதான். ஆனால் பூசணியில் இரண்டு வகை உண்டு ஒன்று வெண் பூசணி மற்றொன்றை பூசணி என்றும் கூறுவர் இவை சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
பூசணிகாய் அல்லது பரங்கிகாயை ஆங்கிலத்தில் பம்ப்கின் என்று கூறுவார்கள்.
Poosani or Parangikai in English PUMPKIN
தேவையானவை
பரங்கி காய் துருவல் - 1 கப்
இட்லி அரிசி 1 கப்
சாமை அரிசி - 1 கப்
உ.பருப்பு - கால் கப்
சின்ன வெங்காயம் -10
காய்ந்த மிளகாய் -7
எண்ணெய் உப்பு தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி உ.பருப்பு, சாமை அரிசி ஆகியவற்றை சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலையில் எண்ணெயை காயவிட்டு காய்ந்த மிளகாய் நறுக்கிய சின்ன வெங்காயம், பரங்கி துருவல் உப்பு சேர்த்து வதக்கவும். இவை ஊறவைத்த அரிசி, உளுந்துடன் சேர்த்து நைசாக அறைக்கவும் மாவை 7 மணி நேரம் புளிக்க வைத்து தோசைகல்லில் ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு எடுக்கவும்.
பரங்கிக்காய் அடை, பரங்கிக்காய் மருத்துவ பயன்கள்,பரங்கிக்காய் to english, parangikai in english, parangikai recipe, parangikai benefits, parangikai adai, parangikai health benefits in tamil, parangikai dosai, parangikai dishes, parangikai in tamil name, parangikai medicinal uses, parangikai nutrition, poosanikai recipes, poosanikai in tamil, poosanikai adai, poosanikai benefits in tamil, poosanikai health benefits, poosanikai dishes, poosanikai dosai
பூசணிக்காய் மருத்துவ பயன்
(பரங்கிக்காய் )
இதயம் பலவீனமாக இருப்பவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
உடல் வலி உள்ளவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி சரியாகும்.
உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய், சிறுநீரக வியாதிகளையும் குணப்படுத்த வல்லது