கோதுமை கஞ்சி செய்வது எப்படி ?
தேவையானவை:
- கோதுமை ரவை - 1
- சின்ன கிளாஸ்,
- தேங்காய்ப்பால் - 1 கிளாஸ்,
- பச்சைமிளகாய் - 2,
- நறுக்கிய கேரட்,
- பீன்ஸ், பட்டாணி - சின்ன கப்,
- தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
- கொத்தமல்லி - சிறிதளவு.
கோதுமை கஞ்சி செய்முறை |
செய்முறை:
பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும். அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
- சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.
- வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
- கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
- கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
- வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
- கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும்.
- இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை.
- சம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.
- மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவும் கணிசமாக குறைகிறது. கோதுமை என்பது அனைத்து காலத்திற்கும் ஏற்ற உணவு. குறிப்பாக இளம் தலைமுறையினர் கட்டாயம் கண்டுகொள்ளவேண்டிய உணவுதான் கோதுமை.
whole wheat kanji, godhumai maavu kanji, wheat flour kanji recipe, samba godhumai kanji, broken wheat kanji, wheat kanji for babies gothambu kanji kerala, wheat kanji benefits, gothumai kanji seivathu eppadi, kothumai kanji, godhumai kanji in tamil, gothumai ravai kanji, how to make wheat porridge at home, broken wheat porridge recipe, wheat dalia recipe for baby, whole wheat porridge recipe, wheat flour recipes for babies, roken wheat porridge benefits, wheat milk porridge for babies, broken wheat porridge for weight lossகோதுமை சத்துகள், கோதுமை பயன்கள், கோதுமை மருத்துவ பயன்கள், கோதுமை உணவு வகைகள், கோதுமை மாவு அரைப்பது எப்படி, கோதுமை வகைகள், கோதுமை சாதம், கோதுமை விலை கோதுமை ரவை செய்வது எப்படி, சம்பா ரவை உப்புமா, சம்பா கோதுமை ரவை சமையல், ரவை உப்புமா செய்வது எப்படி, கோதுமை ரவை பொங்கல், கோதுமை ரவை இட்லி, கோதுமை ரவை பயன்கள், சம்பா கோதுமை பயன்கள்