தினை சாதம் செய்வது எப்படி
தேவையானவை:
- தினை - ஒன்றரை கப்,
- எள் - 150 கிராம்
- உளுத்தம் பருப்பு - 50 கிராம்,
- காய்ந்த மிளகாய் - 6,
- வேர்க்கடலை - 50 கிராம்,
- உப்பு - சுவைக்கேற்ப,
- நல்லெண்ணெய் - தேவையான அளவு,
- கடுகு - அரை டீஸ்பூன்,
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
- கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை விளக்கம்
தினையை, ஒரு கப்புக்கு இரண்டரைப் பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும். ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும். நல்லெண்ணெயில் எள், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸி
யில் பொடிக்க வேண்டும். ஒரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின் மஞ்சள் தூளைச் சேர்க்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.
யில் பொடிக்க வேண்டும். ஒரு கடாயில், நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு தாளித்த பின் மஞ்சள் தூளைச் சேர்க்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.
மருத்துவ பயன்கள்
தினையும் எள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகள். எலும்புகளை உறுதி பெறவைக்கும். தேவையான புரதம் கிடைக்கும். உடனடி ஆற்றலைத் தரும்.
திணை உணவுகள் தினை அரிசி பொங்கல் தினை அரிசி பயன்கள் தினை அரிசி சமையல் தினை தோசை தினை பாயாசம் சாமை உணவு வகைகள் thinai rice recipes in tamil thinai rice benefits in tamil varagu rice benefits in tamil samai rice benefits in tamil thinai rice in tamil thinai in tamil thinai rice for weight loss samai rice recipes in tamil