மக்காச்சோள இட்லி & மருத்துவபயன் - Cornmeal Idly
தேவையான பொருட்கள் :
1. கார்ன் மீல் – 3 கப்
2. உளுத்தம்பருப்பு – 1 கப்
3. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
மிக்ஸியில் உளுத்தம்பருப்பினை போட்டு மைய அரைத்து கொள்ளவும். பிறகு, கார்ன் மீல் சேர்த்து 1 நிமிடம் அரைக்கவும். (பெரியதாக இருந்தால் அரைக்கவும் இல்லையெனில் அரைக்க வேண்டாம்.)
உளுத்தம்பருப்பு மாவு + கார்ன் மீல் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து மாவினை புளிக்கவிடவும்.
இட்லி தட்டில், மாவினை ஊற்றி வேகவிடவும்.
சுவையான சத்தான இட்லி ரெடி. இதனை சாம்பார், சட்னி, பொடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
மக்காச்சோள மருத்துவபயன்:-
மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், கோபால்ட், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின், மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது.மேலும் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி”, வைட்டமின் “டி”, வைட்டமின் “கே” வைட்டமின் “பி6″, வைட்டமின் “பி12″ மற்றும் ஃபோலிக் அமிலம் காணப்படுகிறது.
சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும்.