10 நிமிடங்களில் கொள்ளு இட்லி - Kollu Idly - Horsegram Idly
கொள்ளு இட்லியில் என்ன சத்து உள்ளது?
லோ கிளைசீமிக் தன்மையும் , நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய உள்ளதுகொள்ளு மருத்துவபயன்கள:- Kollu maruthuva payan
ஊளைச் சதையை குறைக்கும், தாதுவைப் பலப்படுத்தும், மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது, உடலுக்கு சூடு ஏற்படுத்தும், உடல் இளைக்க அதிகம் உதவும்கொள்ளு இட்லி செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :1. கொள்ளு – 1 கப்
2. பிரவுன் ரைஸ் (அல்லது) இட்லி அரிசி – 3 கப்
3. உப்பு – தேவையான அளவு
10 நிமிடங்கள் கொள்ளு இட்லி
செய்முறை :
குறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.கொள்ளு + பிரவுன் ரைஸினை தனி தனியாக தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
கொள்ளுவினை நன்றாக மைய அரைக்கவும்.பிறகு அரிசியினை அரைத்து கொள்ளவும்.
கொள்ளு மாவு + அரிசி மாவு + உப்பு சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
பிறகு இட்லி செய்தால் சுவையான சத்தான இட்லி ரெடி. இந்த இட்லியுடன் கார சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு :
இந்த இட்லியுடன் காரமான சட்னி செய்து சாப்பிடால் சுவையாக இருக்கும். மிக்ஸியில் அரைப்தாக இருந்தால் இட்லி அரிசிக்கு கொள்ளு 3 : 1 பங்கு என்று சேர்த்து கொள்ளவும். இதுவே Grinderயில் அரைப்பதாக இருந்தால் 4 : 1 என்ற பங்கில் சேர்த்து கொள்ளவும்.