குடைமிளகாய் சட்னி - green capsicum chutney - kudai milakaai satni

Owshadham - ஒளசதம்
0

குடைமிளகாய் சட்னி - கேப்சிகம் சட்னி- kudai milakaai satni

                               குடைமிளகாய் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்னியானது காலை வேளையில் இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.

குடைமிளகாய் சட்னி - green capsicum chutney - kudai milakaai satni முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து

                               
தேவையான பொருட்கள்: 
பச்சை குடைமிளகாய் - 1 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி - 1 இன்ச் 
பூண்டு - 2 பற்கள் 
வரமிளகாய் - 4 
கறிவேப்பிலை - சிறிது 
புளி/மாங்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லி - 1 சிறுது
செய்முறை: 
                  முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, புளி/மாங்காய் தூள், உப்பு, பொட்டுக்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்தால், குடைமிளகாய் சட்னி ரெடி!!! குறிப்பு: வேண்டுமானால், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்தால், சட்னியானது நன்கு மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

 குடை மிளகாய் மருத்துவ பயன்கள்:-

                     குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும்.

                  அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

                  கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

                 இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !