நூடுல்ஸ் மெதுபோண்டா - noodles methuv ponda
நூடுல்ஸ் மெதுபோண்டா - noodles methuv ponda |
தேவையான பொருட்கள் :
வேகவைத்த நூடுல்ஸ், பொட்டுக்கடலை மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், கோஸ், கேரட், எண்ணெய், உப்பு, கடலை மாவு
செய்முறை :
1. கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.
2. இதனுடன் கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும்.
3. வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள நூடுல்ஸை சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான " நூடுல்ஸ் மெதுபோண்டா " ரெடி.
source : Puthu Yugam TV