தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்,
முளைவிட்ட பாசிப்பயிர் - 1 கப்,
தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எலுமிச்சம்பழச் சாறு - 1 டீஸ்பூன்.
செய்முறை:
முளைவிட்ட பயிரை, மிகவும் குழைந்துவிடாமல் வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும். அகலமான ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, முளைப்பயிறு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு, எலுமிச்சம்பழச் சாறு. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேவையானால் கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளவும்.
டீ அல்லது காபியுடன் சாப்பிட மிகவும் சுவையான உணவு.
Mooligai samyal மூலிகை சமையல்