நெல்லி, வாழை பூ ரசம்
நெல்லி, வாழை பூ ரசம் |
தேவையான பொருட்கள்
வாழை பூ நரம்பு நீக்கியது சிறியது - 1
நறுக்கிய நெல்லிகாய் - 6
பூண்டு - 6 பல்
எலுமிச்சை பழம் - 3
இஞ்சி - 1 துண்டு
மிளகு - 1.1/2 ஸ்பூன்
சீரகம் - 1.1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
நரம்பு நீக்கிய வழைப்பூவை நிரைய தண்ணீரில் வேக வைத்து நீரை மட்டும் தனியாக வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு நெல்லி, பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி ஆறவைத்து அரைக்கவும். பின்பு எலுமிச்சை பழத்தை பிழிந்த சாற்றில் அரைத்த கலவையுடண் உப்பு சேர்த்து வடித்த வாழைப்பூ நீரையும் ஊற்றி சிறு தீயில் கொத்திக்க வைத்து இறக்கவும்.