தனியா ரசம்
தேவையன பொருட்கள்
தனியா - 1.5 கப்
தக்காளி சாறு - 1 கப்
இஞ்சி விழுது - 3 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைத்த மிளகு பொடி - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
வெந்தய பொடி - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
ரசப்பொடி - 1 டீ ஸ்பூன் (ரசப்பொடி செய்முறை)
கடுகு, சீரகம் தலா - 1/4 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 2
பொருங்காயாம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 ரக்கு
எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தனியாவை 3 மணி நேரம் தண்ணிரில் ஊரவைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மிளகாய் தாளித்து தக்காளி சாற்றை ஊற்றவும். பிறகு கொதித்து வரும்பொழுது இஞ்சி விழுது, மல்லி விழுது, மஞ்சள்தூள், ரசப் பொடி, மிளகுதூள், சீரகத்தூள், வெந்தயப் பொடி, உப்பு போட்டு தேவையான அளவு த்ண்ணீர் உற்றி கொதிக்க விடவும், நுரை வரும் போது கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.
மருத்துவ குறிப்பு
தனியாவுக்கு மனித உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை நீக்கும் தன்மை உண்டு. இந்த ரசம் வாயுத் தொல்லை, சளி, உடல் வலிக்கு சிறந்தது.