கடலை பருப்பு ரசம்
கடலை பருப்பு ரசம் |
தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த கடலை பருப்பு - 1/4 கப்
வெல்ல கரைசல் - 3 டேபிள் ஸ்பூன்
புளி விழுது - 1.1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி தளை - சிறிது
வறுக்க அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
மிளகாய் - 2
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
எல்லாவற்றை பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
கடாயில் புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து மசித்த கடலைப்பருப்பு போட்டு கொதிக்க வைக்கவும். பின் வெல்லக் கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, நெய்யில் கடுகு சீரகம் தாளிக்கவும். இறுதியாக் சிறிது கொத்தமல்லி தளை தூவி இறக்கவும்.