கடுகு சாதம் செய்முறை
கடுகு சாதம் எளிய முறையில் செய்வது எப்படி, கடுகு சாதம் மருத்துவ பயன்கள், தமிழர் பாரம்பரிய உணவு வகைகள், கடுகு பொடி சாதம். வேகமான சமையல் குறிப்புகள். kadugu sadam, kadugu sadam recipe, kadugu sadam in tamil, mustard rise in tamil, mustard in tamil, mustard recipe in tamil.
தேவையானவைகள்
- பச்சரிசி நான்கு ஆழாக்கு
- மிளகாய் வற்றல் 20
- கடலைப்பருப்பு 40 கிராம்
- கடுகு 20 கிராம்
- மஞ்சள் பொடி பட்டாணி அளவு
- பெருங்காயம் பட்டாணி அளவு
- தேங்காய் துருவல் 100 கிராம்
- உப்பு 30 கிராம்
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய் 20 கிராம்
- புளி பெரிய எலுமிச்சம்பழம் அளவு.
செய்முறை
அரிசியை சாதமாக சமைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைக்கவும். மிளகாய் வற்றல், கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும் பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு காய்ச்சி பெருங்காயத்தைப் பொரித்து எடுத்து பொடி செய்து கொள்ளவும் பின்னர் கறிவேப்பிலை கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து கொள்ளவும் சாதத்தில் கொட்டிக் கிளறி விட்டு பெருங்காயப் பொடியையும் போட்டு நன்றாக கிளறி பயன்படுத்தவும்.