மாங்காய் சட்னி செய்வது எப்படி
மாங்காய் சட்னி |
தேவையானவை
புளிப்பு மாங்காய் தோள் சீவி துருவியது - 1 காப்
தேங்காய் துருவல் - 1 கப்
பச்ச மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
கடுகு - 1/2 டீஸ் பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ் பூன்
காய்ந்த மிளாகாய் - 3
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப்ப
செய்முறை
தேங்காய் துருவல், மாங்காய் பச்ச மிளாகாய், சின்ன வெங்காய்ம், பூண்டு, உப்பு ஆகிய வற்றுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். வாணிலையில் எண்ணெயை காயவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த சட்னியுடன் சேர்க்கவும்.
மாங்காய் மருத்துவ பயன்கள்
1.மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.2.மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
3.மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
4.கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
5.சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
6.தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும்.
7.ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
8.மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.
9.சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும்.