முஸ்லிம் பிரியாணி செய்வது எப்படி - Muslim Biryani Seivathu Eppadi - மூலிகை சமையல் - Mooligai samayal

Thursday, May 24, 2018

முஸ்லிம் பிரியாணி செய்வது எப்படி - Muslim Biryani Seivathu Eppadi

பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி


முஸ்லிம் பிரியாணி செய்வது எப்படி - Muslim Biryani Seivathu Eppadi

 1. மட்டன் -1/2 கிலோ
 2. அரிசி -1/2 கிலோ
 3. எண்ணெய் – 50 கிராம்
 4. நெய் – 150 கிராம்
 5. பட்டை 2 துண்டு 
 6. கிராம்பு 4
 7. ஏலக்காய் 3
 8. வெங்காயம் 1/4 கிலோ
 9. தக்காளி 1/4 கிலோ
 10. இஞ்சி , பூண்டு – 3 மே.கரண்டி 
 11. கொத்த மல்லி ஒரு கட்டு
 12. புதினா 1/2 கட்டுப. 
 13. மிள்காய் 8
 14. தயிர் 1/4 கப் 
 15. சிகப்பு மிளகாய் தூள் 3 1/2 டீஸ்பூன்
 16. மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி 
 17. ரெட்கலர் பொடி 1 சிட்டிகை 
 18. எலுமிச்சை பழம் 1
 19. நெய் ஒரு டீஸ்பூன்


செய்முறை:

பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி நல்ல கய்ந்ததும் பட்டை , கிராம்பு , எலக்காய் போடவும்.அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.

ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொத்தமல்லி புதினா வை போட்டு கிளறவும்

அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். எண்ணையில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக கிளறவும். பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து மட்டனை வேகவிடவும். தீயின் அள‌வை குறைத்து வைத்து செய்வ‌தால் அடி பிடிக்காது.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். மற்றும் ஒரு பாத்திரத்தில் சம அளவு தண்ணீர் ஊற்றி உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும். அதில் ஊறிய அரிசியினை வடிகட்டி சேர்க்கவும் .

சாதம் முக்கால் பாகாம் வெந்த பின்பு அடுப்பினை சிம்மில் வைத்து வேக வைத்த மட்டன் கிரேவியினை சேர்க்கவும்.

நன்றாக சமப்படுத்தி மேலே கலர் பொடியினை ஒரு ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதன் பிறகு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். கனமான மூடி போட்டு தம்மில் வேக வைக்கவும் . பிறகு பத்து நிமிடங்கள் கழித்து அகப்பையினை வைத்து அரிசி உடையாமல் கிண்டிவிட்டு பரிமாரவும்.