புளி மிளகாய் சட்னி - Puli milagai chutney in tamil - மூலிகை சமையல் - Mooligai samayal

Saturday, May 26, 2018

புளி மிளகாய் சட்னி - Puli milagai chutney in tamil

புளி மிளகாய் சட்னி செய்வது எப்படி
Puli Milagai Chutney 


          மருத்துவ பயனுடன் புளி மிகாய் சட்னி செய்முறை

தேவையானவை

புளி - எலுமிச்சை அளவு
பச்சமிளகாய் - 10 ( பொடியாக நறுக்கவும் )
சின்ன வெங்காயம் - 20
கடுகு - கால் டீஸ்பூன்
உ.பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1 சிட்டிகை
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நல்லெண்ணை - 2 டீஸ்பூன்
வெல்லம் உப்பு தேவையான அளவு

செய்முறை

புளியை சுடு நீரில் ஊறவைக்கவும் வாணலையில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, பெருங்காய்த்தூள், உ.பருப்பு சேர்த்து வருக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சமிளகாய், சேர்த்து வதக்கவும் பிறகு புளிகரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் பின்னர் பின் வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். ஆறவிட்டு காற்று புகாத கண்ணாடி பாத்திரத்தில் சேகரிக்கவும்.


புளி மிளகாய் சட்னி மருத்துவ பயன்


வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது, புளி சூட்டைத் தணிக்கும்

பித்தத்தை சமன்படுத்தி பசியை தூண்டுகிறது. கொழுப்பை குறைப்பதுடன் ஈரலுக்கு பலம் தருகிறது. மலச்சிக்கல் பிரச்னை சரியாகிறது. வாந்தி, குமட்டல், வயிறு உப்புசம், பசியின்மைக்கு மருந்தாகிறது.

அதிகமாக உட்கொண்டால் ஆண்களுக்கு விந்து கழிதம் உண்டாகும்