செட்டிநாடு வெந்தய கீரை சாதம் - Vendaya keerai sadam in tamil

Owshadham - ஒளசதம்

வெந்தயக் கீரை சாதம் செய்வது எப்படி

வெந்தய கீரை பயன்கள், வெந்தய கீரை செய்முறை, மருத்துவ பயன்களுடன் வெந்தய கீரை சமையல், வெந்தய கீரை சாதம் vendhaya keerai recipe, vendhaya keerai benefits, vendhaya keerai seivathu eppadi, vendhaya keerai pulao, vendhaya keerai biryani, vendhaya keerai in tamil, vendhaya keerai recipes in tamil, vendhaya keerai sadam, vendhaya keerai sadam recipe, vendhaya keerai sadam in tamil

வெந்தயக் கீரை சாதம் 

வெந்தய கீரை பயன்கள், வெந்தய கீரை செய்முறை, மருத்துவ பயன்களுடன் வெந்தய கீரை சமையல், வெந்தய கீரை சாதம் vendhaya keerai recipe, vendhaya keerai benefits, vendhaya keerai seivathu eppadi, vendhaya keerai pulao, vendhaya keerai biryani, vendhaya keerai in tamil, vendhaya keerai recipes in tamil, vendhaya keerai sadam, vendhaya keerai sadam recipe, vendhaya keerai sadam in tamil
500 கிராம் வெந்தயக்கீரையைக் காம்பு முதலியன போக்கி ஆய்ந்து பொடிப் பொடியாய் அரிந்து அலம்பி ஒரு பாத்திரத்தில் போட்டு 4 ஆழாக்கு தண்ணீர் விட்டு 10 கிராம் உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் போட்டு அடுப்பில் வேக வைத்து விட்டு கீழே இறக்கி தண்ணீரை வடித்து வடவும் பிறகு கீரையை நன்றாக கசக்கி பிழிந்து விட்டு உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்

உளுந்தம் பருப்பு 35 கிராம்
மிளகாய் வற்றல் 10 கிராம்
சீரகம் கால் தேக்கரண்டி
கிராம்பி 5
ஜாதிக்காய் பட்டாணி அளவு
சாதிபத்திரி சிறு துண்டு
மிளகு கால் தேக்கரண்டி

இவற்றை தனித்தனியே வறுத்து பொடி செய்யவும் இதில் தேங்காய் துருவல் 70 கிராம் உப்பு தூள் 50 கிராம் போட்டு கலந்து கொள்ளவும்

பிறகு இரண்டு ஆழாக்கு அரிசியை சாதம் சமைத்து ஒரு தாம்பாளத்தில் போட்டுக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 100 கிராம் நெய் விட்டு காய்ந்ததும் கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி கடுகு வீசும் தேக்கரண்டி மிளகாய் வற்றல் 4 கிள்ளி ட்டு தாளிதம் செய்து தயாரித்திருக்கும் வெந்தயக்கீரையை அதில் கொட்டி வதக்கி அதில் இருக்கும் சாதத்தில் போட்டு பிசறி ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் பிழிந்துவிட்டு தணல் மீது சிறிது நேரம் வைத்திருந்து பிறகு எடுத்துக் கொள்ளவும்.

வெந்தயக் கீரை மருத்துவ பயன்

வெந்தயக் கீரை ஜீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. பார்வைக் கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை, வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது

வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !